இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு ஒதுக்கீட்டை விரிவுப்படுத்துங்கள் - தென் கொரிய சபாநாயகரிடம் பிரதமர் வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

22 Jan, 2022 | 03:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழில்வாய்ப்புக்களை விரிவுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தென்கொரியாவின் தேசிய சபை சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பார்க் பியோங்-சியூகிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தென்கொரியாவின் தேசிய சபை சபாநாயகர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட சபாநாயகர்  திறமையான இலங்கை இளைஞர் சேவையாளர்கள் இரு நாட்டின் வருமானத்தையும் அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டார்.'

வெளிவிவகாரத்துறை அமைச்சின் தகவலின்படி 22,000 ஆயிரம் இலங்கையர்கள் தென்கொரியாவில் தொழில் புரிகிறார்கள்.2019ஆம் ஆண்டு அவர்கள் ஊடாக 520 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ள

2019ஆம் ஆண்டு தென்கொரியாவில் இலங்கையர்களுக்காக 3,600 தொழில்வாய்ப்புக்கள் ஒதுக்கப்பட்டன.கொவிட் தாக்கத்தினால் 2020ஆம் ஆண்டு அத்தொழில்வாய்ப்புக்கள் 500ஆக குறைவடைந்தன.தற்போது சுமார் 400 பேர் வரையிலே அங்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.20 மாத காலத்திற்கு பிறகு 33 இலங்கையர்கள் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றுள்ளனர்.

இலங்கையில் வாழும் தென்கொரிய நாட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கும்இகொரிய மொழியை வெளிநாட்டு மொழியாக உயர்தர படதிட்டத்தில் உள்ளடக்க தீர்மானித்துள்ளமைக்கும் தென்கொரிய சபாநாயகர் பிரதமரிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒருகால கட்டத்தில் இலங்கையின் அதிக முதலீடுகளை மேற்கொண்ட நாடுகளில் தென்கொரியா பிரதான நிலையில் இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் இலங்கையில் தென்கொரியா முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஆகிய விடயங்கள் குறித்து இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்இலங்கைக்கும்இதென்கொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பமாகி 45 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளன.இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு அனைத்து துறைகள் ஊடாகவும் மேம்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் பிரமரிடம் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்