இரத்மலாணை - அத்திடிய பகுதியில் வாகன சேவை மையமொன்றிற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இரத்மலாணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தீயை அணைப்பதற்காக  தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த தீ ஏற்பட்டதன் காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.