ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஜனநாயகவாதி - அமைச்சர் சந்திரசேன

21 Jan, 2022 | 04:18 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்படுவார் என கூறினாலும் அவர் ஹிட்லர் அல்ல, அவர் ஜனநாயகவாதியாவார். 

ஆனால் இந்த நாட்டை ஆட்சிசெய்ய ஹிட்லர் தான் தேவைப்படுகின்றார்  என காணி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சியில் நாடு பூராகவும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று உலகின் வல்லரசான சீனாவை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலமே உலகின் முதலாவது பொருளாதார வல்லரசாக மாறியுள்ளனர். 

அதேபோல் வெவ்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிக்கொண்டுள்ளமை உண்மையே, விலைவாசி அதிகரித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் மறுக்கவில்லை. அரசாங்கமாக இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வேண்டும். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிக்கு பின்னர் இது குறித்து துரிதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். .

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் விமர்சித்தாலும் ஜனாதிபதி திறமையான அதேபோல் சிறந்த தலைவர் என்பது எமக்கு தெரியும். 

தொழிற்சங்கங்கள் நாட்டை குழப்பியடித்துக்கொண்டுள்ள நிலையில், மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் இந்த காலகட்டத்தில் ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியே சரியானது என நினைகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08