எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 10:34 AM
image

(நா.தனுஜா)

எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களால் புதிதாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதுடன் ஏற்கனவே பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உள்ளது. அதனைச்செய்வதற்குத் தவறும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நேற்றைய தினம் விஜயம்செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், நளின் பண்டார உள்ளிட்டோர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினர். 

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

எரிவாயு கலவையில் மாற்றம் செய்யப்பட்டதன் விளைவாக கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி எரிவாயு கலவையில் செய்யப்பட்ட மாற்றமே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்களுக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் 7 பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி வீடுகள் மற்றும் உணவகங்களின் சொத்துக்களும் சேதமடைந்திருக்கின்றன. இதுகுறித்து நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்த போதிலும் தற்போதுவரை சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதும் இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எமது நாட்டைப் பொறுத்தமட்டில் பொருட்களின் தரம் தொடர்பில் பரிசீலித்து, அதனை உறுதிசெய்யும் பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின்வசமே உள்ளது. அந்தவகையில் தற்போது எரிவாயு கலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறான நியமங்கள் பேணப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் வெளியிடப்படவில்லை. 

எனவே முதலில் அவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் ஊடாக எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரமும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உள்ளது. 

எனவே அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக நாம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இதுகுறித்துத் தெரியப்படுத்தியிருப்பதுடன் அவர்களின் வசமுள்ள அதிகாரங்கள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24