25 சதவீத கட்டாய பெண்கள் பிரதிநிதித்துவம் மாகாணசபை, பாராளுமன்றம் வரை விரிவுபடுத்தப்படவேண்டும் - சஜித் 

Published By: Digital Desk 4

20 Jan, 2022 | 04:14 PM
image

நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டமை எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புரட்சியொன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு இந்தச் சட்டம் மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றம் வரையில் ஜனநாயக ரீதியில் விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து, அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 பெண்களுக்கு பெப்ரல் அமைப்பின் ஊடாகப் பயிற்சி வழங்குவதற்கான செயற்திட்டம் 'மாற்றத்திற்கான பாதை' என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

 அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டமை எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுக்கூறத்தக்க புரட்சியொன்றை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தச் சட்டம் மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றம் வரையில் ஜனநாயக ரீதியில் விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

நிதி முகாமைத்துவம், சேமிப்பு, சுகாதாரத்துறை மேம்பாடு, எதிர்கால சந்ததியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், ஊழல்மோசடிகளைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தமட்டில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் உயர்வான இயலுமையைக் கொண்டிருக்கின்றனர். ஜப்பான் உள்ளடங்கலாக சில நாடுகள் உயர்வான சேமிப்பின் ஊடாகவே அவற்றின் முதலீடுகளை அதிகரித்துக்கொண்டன.

 எனவே தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கக்கூடிய எமது நாட்டின் சேமிப்பை அதிகரித்து, அதனூடாக முதலீடுகளை அதிகரிக்கவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகம் என்பவற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளின் விளைவாக அண்மையகாலங்களில் நாட்டில் வறுமை நிலையும் அதன் தொடர்ச்சியாக மந்தபோசணையும் தோற்றம்பெற்றுள்ளன.

பொதுவாகவே வீடுகளில் பெண்கள் தமது பிள்ளைகளின் போசணை மட்டம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். 

ஆகவே அவர்களால் நாடளாவிய ரீதியிலுள்ள சிறார்களின் போசணைசார் தேவைகளை உணர்ந்து, அதனைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை செயற்திறனான முறையில் மேற்கொள்ளமுடியும்.

அதேவேளை மறுபுறம் நாட்டின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றது. தமது குடும்பத்தின் தேவைகளை முன்னிறுத்தித் தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் முகங்கொடுக்கவேண்டியுள்ளமையே அதற்குப் பிரதான காரணமாகும்.

அதுமாத்திரமன்றி பெரும்பாலான துறைகளின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தீர்மானமெடுத்தல் என்பன ஆண்களை மையப்படுத்தியதாகவே அமைந்திருப்பதும் ஓர் குறைபாடாகும்.

அவற்றையும் மாற்றியமைப்பதன் ஊடாக எதிர்வருங்காலங்களில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவால் அதிகரிக்கமுடியும் என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54