நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்த போவதில்லையென என அமைச்சரவை திர்மானித்துள்ளது.

இதனை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இதனடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு செல்லும் பணியாளர்களின் வயதெல்லை 25 ஆகவும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்களின் வயதெல்லை 23 ஆகவும் இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.