அபிவிருத்தி லொத்தர் சபையின் லக்கின அதிர்ஷ்டம் அறிமுகப்படுத்தும் “டபள் சான்ஸ்” புதிய சீட்டிழுப்பினூடாக அதற்குரிய லொத்தர் டிக்கெட்டினைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மென்மேலும் வெற்றி வாய்ப்புகளை அள்ளி வழங்க அபிவிருத்தி லொத்தர் சபையினர் தீர்மானித்துள்ளனர். 

ஏற்கனவே இலக்கின அதிர்ஷ்டம் சீட்டிழுப்பினூடாக வெல்லப்படும் பரிசுகளுக்கு மேலதிகமாக டபள் சான்ஸ் விஷேட சீட்டிழுப்பின் போது தெரிவு செய்யப்படும் இரண்டு இலக்கங்களைப் பொருந்தச் செய்தும் பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இதன் அடிப்படையில் விஷேட சீட்டிழுப்பில் தெரிவு செய்யப்படும் ஒரு இலக்கத்திற்கு ரூபா 50 உம், இரண்டு இலக்கங்களுக்கு ரூபா 1,000 உம், உள்ளடங்கலாக அதிகளவிலான ரூபா 1,000 மற்றும் ரூபா 50 பணப்பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உண்டு என்பதனையும் அபிவிருத்தி லொத்தர் சபை அறியத் தருகின்றது. 

இந்த சீட்டிழுப்பிலுள்ள விஷேட அம்சம் என்னவெனில், ஒருவர் முதலாவது சீட்டிழுப்பில் வெற்றி பெறும் அதேசமயம் டபள் சான்ஸ் எனப்படும் இரண்டாவது சீட்டிழுப்பிலும் வெற்றி பெற்றாரானால், சீடடிழுப்புகள் இரண்டுக்குமான இரண்டு பரிசுகளைப் பெற்றுப் கொள்ளும் வாய்ப்பு அவருக்குண்டு. இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் டபள் சான்ஸ் லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பரிசுகளை அள்ளி வழங்குவதற்குத் தயாராயுள்ளதாக அபிவிருத்தி லொத்தர் சபை அறிவித்துள்ளது.

இந்த புதிய டிக்கெட்டின் முதல் சீட்டிழுப்பு 2016 இம் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிவப்பு நிற லக்கின அதிர்ஷ்டம் டிக்கெட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த நிகழ்ச்சியினூடாக தொடர்ந்து 03 மாதங்களுக்கு ஏராளமான பணப்பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளுமுகமாகவும் அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 

தொடர்ச்சியாக லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக புதிய லொத்தர் ஒன்றினை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அபிவிருத்தி லொத்தர் சபை லக்கின அதிர்ஷ்டம் லொத்தரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி “டபள் சான்ஸ்” என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதனூடாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 

இந்த புதிய சீட்டிழுப்பின் மூலம் அதிகதிகமான பலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதிகதிகமான லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்து அவற்றுக்குக் கிடைக்கும் வழக்கமான பரிசு அல்லது “டபள் சான்ஸ்” ஊடாகக் கிடைக்கும் விஷேட பரிசுகளையும் பெற்றுக் கொள்ளுமாறு, லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிடம் அபிவிருத்தி லொத்தர் சபை கேட்டுக் கொள்கின்றது.