பொரளை தேவாலய குண்டு விவகாரம் : கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Published By: Digital Desk 3

20 Jan, 2022 | 11:33 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், அக்குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் என நம்பப்படும்  நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்கு மூலத்துக்கு அமைய ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 17 ஆம் திகதி  இரவு 7.30 மணியளவில், இந்த விவகாரத்தில் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்கும்  கொழும்பு தெற்கு வலயத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் பிலியந்தலையில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.  

இந்நிலையில் அவரையும், ஏற்கனவே எம்பிலிபிட்டிய - பனாமுர பகுதியில் வைத்து கைது செய்த பிரதான சந்தேக நபரான கடவத்தையைச் சேர்ந்த 65 வயது நபரையும்  தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

அதன்படி, இந்த விவகாரத்தில் தற்போதைக்கு மொத்தமாக 5 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாக அறிய முடிகிறது. 

இதில் மூவர் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பிலும், ஏனைய இருவரும் கொழும்பு  தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் பொறுப்பிலும் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பணாமுர பகுதியில்   அன்ன தான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்கும்   இந்த சிறப்புக் குழு  பிரதான சந்தேக நபரை கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்ததாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கம்பஹா - கடவத்தை - மங்கட வீதி  பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், முதலில் முஸ்லிம் ஒருவர் குண்டை வைக்க தனக்கு 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்ததாக கூறியுள்ள நிலையில், பின்னர் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற வைத்தியர் ஹேரத்தின் ஆலோசனையில் அச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே பிரபல  சமூக செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான ஓசல ஹேரத்தின் தந்தையான குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தன்மீதான குற்றச்சாட்டை குறித்த வைத்தியர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ள, கடவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தானே நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை மலசல கூடத்தில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றினையும் கொண்டு சென்றதாக கூறியுள்ளதாகவும் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் அந்த சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளை திசை திருப்ப  இவ்வாறு மாற்றி மாற்றி விடயங்களை கூறுகின்றாரா என்ற சந்தேகமும் உள்ளதாக உயர் பொலிஸ்  அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே,  கைது செய்யப்பட்ட வைத்தியரின்  வீட்டிலிருந்து  4 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வாயு ரைபிள், 2 வாள்கள், ஒரு ரம்போ கத்தி என்பனவும் மீட்கப்ப்ட்டதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில்  29,25,41,55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

தேவாலயத்தில் உள்ள திருச் சொரூபம் அருகே  இருந்தே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் பசை நாடா, இறப்பர் வளையல்கள், தீப்பெட்டிகள் மற்றும் மணக் குச்சிகளைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றிய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார். 

சந்தேக நபர் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும்  அவர் கூறிய நிலையில், அச்சிறுவர் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றினையும் வழங்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்  என ஆரம்பத்தில் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட நபர் கடந்த 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 9 மாதங்களாக தேவாலய வளாகத்திலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குண்டு ஒன்றினைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தி தடயப் பொருட்களையும் பொலிசார் அவரது தங்குமிடத்திலிருந்து கண்டெடுத்ததாக  கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவரும் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01