“இன்டர்கொன்டினன்டல் அழகுராணி 2016” (‘Miss Intercontinental 2016’) என்ற மதிப்பார்ந்த விருதினைப் பெறுவதற்காகப் போட்டியிடும் அழகுராணிகள் உலகின் சகல கண்டங்களிலிருந்தும் இலங்கைக்கு வருகை தரவிருப்பதால், இயற்கை வனப்பும் கீர்த்திமிக்க கலாசார மரபும் வாய்ந்த இலங்கைக்கு 2016ஆம் ஆண்டு ஓர் விசேட ஆண்டாகும். 

கோலாகலமாக நடைபெறவுள்ள இச் சர்வதேச அழகுராணிப் போட்டியை நடத்துவதற்கு ஒரு தெற்காசிய நாடு தெரிவு செய்யப்பட்டிருப்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் தடவையாகும்.

உடல்நலம் மற்றும் அழகியல் சார்ந்த துறையில் நம்பிக்கை வாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்ட Biona, இன்டர்கொன்டினன்டல் அழகுராணி விழாவுக்கான அழகியல் பங்காளி என்ற முறையில் தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்கவிருக்கிறது. 

மருந்துகள் மற்றும் அழகியல் ஊட்டச்சத்துக்களின் உலகளாவிய உற்பத்தியாளரான Natures Only நிறுவனத்தின் முன்னணி வர்த்தகப் பெயர்களுள் Biona ஒன்றாகும்.

Natures Only  நிறுவனம் “உடல்நலத்திற்காக இயற்கையின் செல்வம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

குறித்துரைக்கப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்குப் புதுப்புது வழிகளிலான தீர்வுகளை வழங்குவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதே அதன் குறிக்கோளாகும். Natures Only நிறுவனம் பலதரப்பட்ட விஞ்ஞானத் துறைகளிலும் உற்பத்தி, ஆராய்ச்சி, அபிவிருத்தி என்பவற்றிலும் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. 

ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் தனது செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கை உடல்நலப் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வையும் அதன் நன்மைகளையும் அதிகரிப்பதற்கு அது தன்னை அர்ப்பணித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஊட்டச்சத்து மருந்துகளின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் பல தசாப்தகால அனுபவத்தை உடைய Natures Only நிறுவனம், அழகியல் ஊட்டச்சத்துக்களின் அதிகரித்துவரும் தேவையை ஈடுசெய்வதில் ஆழ்ந்த அக்கறை காட்டுகின்றது.

அழகு மற்றும் அறிவின் மூலம் வெற்றியை ஊக்குவித்து, அதன் பயனாக இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் மகளிருக்கு வலுவூட்டுவதும் பெண்களின் உள்ளார்ந்த, உண்மையான அழகை வெளிக்கொணர்வதும் இன்டர்கொன்டினன்டல் அழகுராணிப் போட்டியின் குறிக்கோளாகும். 

Biona வர்த்தகப் பெயரும் இதற்குச் சமானமான குறிக்கோளையே கொண்டுள்ளது. Biona தனது அனுபவத்தையும் இயற்கை மேனியழகைப் பேணுவதற்கு ஒவ்வொரு மங்கையும் கொண்டிருக்க வேண்டிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் உடல்நல அறிவையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் அழகுராணிப் போட்டிகளுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றது. அதிகமதிகமான மக்கள் அறிவும் அழகும் தன்னம்பிக்கையும் வாய்ந்தவர்களாக விளங்குவதை ஊக்குவிக்க Biona விரும்புகிறது. ‘Biona Pearl’ என்பது சருமம்,கேசம் மற்றும் நகங்களுக்கு விசேட பராமரிப்பை வழங்குவதன் மூலம் ஒருவரின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மேலதிக ஊட்டச்சத்துச் சேர்வையாகும். இது உலகெங்கும் சந்தைப்படுத்தப்படுகின்றது.

அழகுராணிப் போட்டி நடைபெறும் காலத்தில் அழகுக்கலை நிபுணர்கள், அரச நிறுவனங்கள், வைத்தியர்கள், பாவனையாளர்கள் மற்றும் கலைத் துறையினரின் ஒத்துழைப்புடன் பயிற்சிக்களங்கள், விழிப்புணர்வுத் திட்டங்கள், அழகியல் பராமரிப்பு முகாம்கள் என்பவற்றை நடத்த Biona ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ரீதியாக அழகியல் கலையை ஊக்குவிப்பதும் பெண்களுக்கு வலுவூட்டுவதும் இதன் நோக்கமாகும். இந்து சமுத்திரத்தின் அழகிய முத்தான இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பித் தொழில் முயற்சிகளை விருத்தி செய்ய Biona தொடர்ந்து முயற்சி செய்யும்.