பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­கள் குறித்து தனது முடிவை எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை அறிவிப்பதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று உறு­தி­ய­ளித்­துள்ளார்.


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் நேற்று நடத்திய பேச் சுவார்த்தையின்போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங் கியுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் வட­மா­காண அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நேசன், ரி.குரு­கு­ல­ராஜா, டாக்டர் பி.சத்­தி­ய­லிங்கம்இ பி.டெனீஸ்­வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் ஜனா­தி­ப­தி­யுடன் அவ­ரது ஆலோ­சகர் கரு­ணா­ரட்­ணவும் இந்தப் பேச்­சுக்­களில் பங்கேற்றிருந்தார்.


இந்த சந்திப்பின்போது வட­மா­காண சபை எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், தேவைகள், மத்­திய அர­சாங்­கத்­தினால் ஏற்படுத்தப்படும் தடைகள் என்­ப­வற்றை விளக்கும் விரி­வான அறிக்கை ஒன்றை முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தார். இதி­லுள்ள விட­யங்கள் தொடர்­பா­கவும் விளக்­க­ம­ளித்த முத­ல­மைச்சர்இ தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை தொடர்பில் முக்­கி­ய­மாக ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தார்.


இதன்போது கருத்து வெளியிட்ட விக்கினேஸ்வரன்,


இலங்­கையில் இரண்டு தட­வைகள் ஆயு­தந்­தாங்­கிய கிளர்ச்­சியில் ஈடு­பட்ட ஜே.வி.பி.யின­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்டு அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அதே­போல தமிழ் அர­சியல் கைதி­களும் பொது­மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


முத­ல­மைச்­சரின் கருத்தை ஏற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கைதி­களும் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும்இ இருந்த போதிலும் இந்த விட­யத்தில் அர­சியல் ரீதி­யாக சில பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். எனினும் இதனை தன்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்த முத­ல­மைச்சர்இ ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி கைதி­களின் விடு­த­லைக்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.


அத்துடன் தமிழ்க் கைதி­களை தொடர்ந்தும் தடுத்­து­வைத்­தி­ருப்­பதால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் அவர்கள் மட்­டு­மல்ல. கைதி­க­ளு­டைய குடும்­பத்­தி­னரும் இதனால் சொல்­ல­மு­டி­யாத துன்­பங்­களை அனு­ப­வித்­து­வ­ரு­கின்றனர். தின­சரி என்னைச் சந்­திக்கும் கைதி­களின் உற­வி­னர்கள், இது தொடர்பில் எழுப்பும் கேள்­வி­க­ளுக்கு நான் பதி­ல­ளிக்க வேண்­டி­யி­ருக்கிறது என்று முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தார்.


இத­னை­ய­டுத்து கைதி­களின் முழு­மை­யான கோவை­க­ளையும் தனக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு சட்­டமா அதி­பரைப் பணித்த ஜனா­தி­பதிஇ எதிர்­வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததார்.


அத்துடன் வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றத்துக்காக எனக்கூறி காடழிக்கப்படுதல் போன்ற விடயங்கள் முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.