தேயிலை மற்றும் ரப்பரின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த  நெருக்கடியான  நிலைமையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவது என்பது  கடினமான விடயம் தான்.  ஆனால் இந்த விடயத்தில்  முதலாளிமார் சம்மேளனமும்  தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.