24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும் - கம்மன்பில

Published By: Digital Desk 3

19 Jan, 2022 | 09:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்விநியோகத்தை மின்சார சபையினால் கட்டுப்படுத்த முடியும் ஆனால் போக்குவரத்துக்கான எரிபொருள் விநியோகத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.  

மின்சார சபை 24 மணித்தியாலமும் தடையில்லாமல் மின்விநியோகத்தை வழங்கினால் எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் பாரிய நெருக்கடிய ஏற்படும். 

மின்சாரத்துறை அமைச்சு முன்கூட்டி திட்டங்களை முறையாக செயற்படுத்த வேண்டும் என வலுசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தித்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விநியோகிக்காத காரணத்தினால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் முற்றிலும் தவறானதாகும்.

மின்சார சபை முறையான திட்டங்களை செயற்படுத்தவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

கடந்த டிசெம்பர் மாதகாலப்பகுதியில் நீர்மின் ஊடாக 60சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் மின்சார சபை தமக்கு டீசல் மற்றும் உராய்வு எண்ணெய் பெப்ரவரி மாதமளவில் அவசியப்படும் என கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் குறிப்பிட்டது.

வறட்சியான காலநிலை ஆரம்பமானதை தொடர்ந்து மின்சார சபை மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் உராய்வு எண்ணெய் ஆகியவற்றை வழங்குமாறு இம்மாதம் 11ஆம் திகதி கோரியது.மின்சார சபைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 1500 மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்க வேண்டும்.

அச்சந்தர்ப்பத்தில் பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்திடம் மின்சார சபைக்கு விநியோகிப்பதற்கான எரிபொருள் கையிருப்பில் இருக்கவில்லை.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பாரிய வெளிநாட்டு கையிருப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ளது. 

வலுசக்தி துறை அமைச்சின் கடமைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள வேளை மின்சாரத்துறை அமைச்சின் கடமைக்கும் டொலர் திரட்டுவது சிக்கல் நிலைமையை தோற்றுவித்துள்ளது.

மின்சார சபை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் போக்குவரத்து தேவைக்கான எரிபொருளை எம்மால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

மின்சார சபைக்கு தற்போது 10,000 மெற்றிக்தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அத்தொகை 8 நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாக அமையும்.

ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசியம்.ஏற்றுமதி வருமானத்தி;ன் ஊடாக ஒரு மாதத்திற்கு 750 தொக்கம் 800 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறுகிறது.வரவினை காட்டிலும் செலவு அதிகமாக உள்ளது.

மின்சார சபை 24 மணித்தியாலமும் மின்விநியோகத்தை வழங்கினால் எதிர்வரும் நாட்களில் மீண்டும் மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது குறித்து மின்சார சபை அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48