உணவுக்கு  தட்டுப்பாடு ஏற்படாது - அரசாங்கம்

19 Jan, 2022 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. 

அது போன்ற நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பசுமை விவசாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக குறுகிய காலத்திற்கு சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

இதனால் உள்நாட்டு உற்பத்திகளை குறைவடையும் என்று எதிர்பார்த்தால் , அது 20 - 25 சதவீதமாகவே காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

அது தவிர இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான இறப்பர் - அரிசி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சீனாவிடமிருந்து 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பாக கிடைக்கப் பெறவுள்ளது. 

இந்த அரிசி தொகை மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கிடைக்கப் பெறும்.

மறுபுறம் அரசாங்கம் தோட்டப்புறங்களில் மரக்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்திகளையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. 

இவ்வாறான உற்பத்திகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு வீடுகளுக்கும் 5000 ரூபா பெறுமதியுடைய விவசாய பொருட்களை வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும். 

இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு தத்தமது தேவைக்கு உகந்தவற்றையாவது உற்பத்தி செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01