சபையில் உறுப்பினர்கள் இன்றி வெறிச்சோடிப்போன ஆசனங்கள்

Published By: Digital Desk 3

19 Jan, 2022 | 04:09 PM
image

(ஆர்.யசி)  

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கைவிளக்கவுரை மீதான  முதல் நாள் விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமான நிலையில் சபையில்  பெரும்பாலான உறுப்பினர்கள்  இன்றி ஆசனங்கள்  வெறிச்சோடிக் காணப்பட்டன.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை  பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நேற்று முழு நாளும் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை நேற்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் நடத்த ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் சபை கூடியபோது சபையில் அரச, எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள் மட்டுமே சபையில் அமர்ந்திருந்தனர். 

எதிர்க்கட்சிதரப்பின் முன் வரிசையில் 20 ஆசனங்கள் உள்ள நிலையில் அதில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மட்டுமே அமர்ந்திருந்தனர். 

எதிர்க்கட்சித்தலைவரோ ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோ சபைக்கு வருகை தரவில்லை.

அதேபோன்று அரச தரப்பின் முதல் வரிசையில் உள்ள 20 ஆசனங்களில் சபை முதல்வரான தினேஷ் குணவர்தன மட்டுமே அமர்ந்திருந்தார். அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட எந்தவொரு முன்வரிசை அமைச்சர்கள்  கூட  சபைக்கு வந்திருக்க வில்லை.

அத்துடன் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தை அரச தரப்பின் பின்வரிசை எம்.பி. யான கோகிலா குணவர்தன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

அவரையடுத்து இன்னொரு அரச தரப்பு பின்வரிசை எம்.பி. யான இசுரு தொடன்கொட உரையாற்றினார். அதன் பின்னரே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார். 

நேற்று முழு நாள் விவாதத்திலும் பெருமளவான உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டன. இந்த விவாதம் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38