சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

19 Jan, 2022 | 02:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசின் திட்டங்களை செயற்படுத்துவதில் அமைச்சுக்களின் செயலாளர்களது சேவை அளப்பரியது. சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு இன்றையதினம் 19 ஆம் திகதி செயலாளர் பதவிக்கான கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மேலதிக செயலாளராகவும், ஜனாதிபதியின் சேவை பிரிவின் பிரதானியாக 2004 தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும், 2009ஆம் ஆண்டு பதவி வகித்துள்ளதுடன், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மாத்தறை மற்றும் காலி ரிச்மன்ட் வித்தியாலங்களில் ஆரம்ப கல்வியை பெற்றுக்கொண்ட காமினி செனரத் களனி பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துக் கொண்டார்.  அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில்  தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான முதுகலை டிப்ளோமாவை பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், பாக்கிஸ்தான், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி டிப்ளோமாவை கல்வியை பெற்றுக் கொண்டுள்ளார்.

மோட்டார் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் ஆகியவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன், மக்கள் வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் அரச முயற்சியாண்மை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

நீர்பாசனத்துறை அமைச்சின் செயலாளராக பதவி வகித்த அனுர திஸாநாயக்க இலங்கை நிர்வாக சேவை பிரிவின் அதிகாரியாவார். அனுர திஸாநாயக்க பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுர திஸாநாயக்க பிரதான அமைச்சுக்களின் செயலாளராக பதவி வகித்துள்ளார்.

நீர்பாசனத்துறை அமைச்சின் புதிய செயலாளராக கே.டப்ள்யூ அய்வன் த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டின் அனைத்து செயலொழுங்கும் அரச சேவையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆகவே அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு மற்றும் திட்டங்கள் அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களது பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09