எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் உதவி

Published By: Vishnu

18 Jan, 2022 | 05:39 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள்  நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்  கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை உறுதி செய்யும் வகையில் டெல்லி  வெளிவிவகார அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய எரிப்பொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கடந்த 15 ஆம் திகதி மெய் நிகர் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

மறுப்புறம்  அமைச்சர் பஷpல் ராஜபக்ஷவின் கடந்த டிசெம்பர் மாதம்  முன்னெடுக்கப்பட்ட டெல்லி விஜயத்தின் எதிர்பார்ப்புகளின் ஒன்றை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08