இராணுவ ஆச்சரியங்களை ஏற்படுத்த தயார் நிலையில் சீனா

18 Jan, 2022 | 12:15 PM
image

(ஏ.என்.ஐ)

கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், தாய்வான் மற்றும் இந்திய எல்லைக்கு அருகில் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ அபிலாஷைகளால்  நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

சீன மக்கள் விடுதலை இராணுவம் பணப் பிரளயத்தால் பெரிதும் பயனடைந்துள்ளதுடன் ஏராளமான அதிநவீன போர் உபகரணங்களும் தம்வசம் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் குறித்து தகவல்கள் வெளியாகின. இருப்பினும், 2022 இல் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

'மூலோபாய ஆச்சரியம்' உன குறிப்பிட்டு இந்தோ-பசிபிக் பகுதிக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு  பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கெர்ட் கேம்ப்பெல்  சீன அபிலாஷைகள் குறித்து எச்சரித்திருந்தார்.

'மூலோபாய ஆச்சரியம்' என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவரிக்கவில்லை. ஆனால் அவரது கருத்துக்கள் சீனா பிராந்தியத்தில் எங்காவது ஒரு குறிப்பிடத்தக்க அடிப்படை ஒப்பந்தத்தை உருவாக்கிக்கொண்டிருக்கலாம் என்பதையே குறிக்கிறது. அல்லது பீஜிங் அதன் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை கொண்டு எதிர்பாராத வழிகளில் தாக்கலாம் என்று கெர்ட் கேம்ப்பெல்  எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், அத்தகைய கருத்துக்கள் நல்லவை அல்ல. கடந்த பத்தாண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகளாக சீனாவின் எழுச்சிக்கு  எதிராக அமெரிக்கா தயாராகி இருக்க வேண்டும். மற்ற நாடுகளின் மீது சீனா எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை அமெரிக்க உளவுத்துறை கவனிக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் நண்பர்களைப் புறக்கணிப்பதன் மூலமும் வாய்ப்புகளை மறுப்பதன் மூலமும் அமெரிக்கா பின்னடைவுகளையே சந்தித்துள்ளது. 

உண்மையில், 'மகத்தான தார்மீக, மூலோபாய, வரலாற்று நலன்கள்' இருந்தபோதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு உதவ அமெரிக்கா போதுமான அளவு  ஈடுப்பாடுடன் இருக்க வில்லை என்பதை காம்ப்பெல் ஒப்புக்கொண்டுள்ளார்.

இராஜதந்திரம், வணிகம், உள்கட்டமைப்பு அல்லது குடிமக்கள் என எதுவாக இருந்தாலும், பசிபிக் முழுவதும் சீனா ஒரு முக்கிய இருப்பைக் கொண்டுள்ளது. சீனாவின் கைகள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. 

பீஜிங் பசிபிக் பகுதியில் ஒருவித இராணுவ பிரசன்னத்தை உருவாக்குவதற்கு  முயற்சிக்கப்படுகின்றமை வெளிப்படுகின்றது. இது எம் பின்னால் எதிரி இருப்பது போல் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இரட்டை-பயன்பாடு'  கொண்ட (இராணுவத்தை ஆதரிக்கும் திறன் கொண்ட வணிகம்) சீன தளங்கள் சவால்கள்  மிக்கவை .  

எனவே சீனாவின் 'மூலோபாய ஆச்சரியத்திற்கான' தயாரிப்பு குறித்து அனைத்து கண்களும் இருக்க வேண்டும். இது 2022 ஆம் ஆண்டு முழுவதும் தாய்வான் போன்ற இடங்களுக்கு புதிய ஆயுதங்களுடன் அச்சுறுத்தல்களுடன் கூடுதலாக வரலாம் என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08