பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் ; கொவிட் தொற்றுக்குள்ளானோரும் பரீட்சை எழுத ஏற்பாடு

Published By: Digital Desk 3

18 Jan, 2022 | 10:35 AM
image

(எம்.மனோசித்ரா)

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் என்பவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. 

அதற்கமைய கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கும் பரீட்சையில் தோற்றக் கூடிய ஏற்பாடுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன தெரிவிக்கையில்,

எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதலாம் பகுதியும், 11 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை இரண்டாம் பகுதியும் இடம்பெறும். 

பரீட்சாத்திகளை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் 09.00 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

இம்முறை 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பேர் சிங்கள மொழி மூலமும் , 85 ஆயிரத்து 446 பேர் தமிழ் மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 

இதற்காக 2,943 பரீட்சை மத்திய நிலையங்களும் , 496 ஒருங்கிணைப்பு நிலையங்களும் , 108 விசேட பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இதே வேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி , மார்ச் 5 ஆம் திகதி முடிவடைகிறது. இம்முறை 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பேர் பாடசாலைகள் ஊடாகவும் , 66,101 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றார்.

விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவிக்கையில் ,

கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட மாணவர்கள் , தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் , தொற்று அறிகுறியுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் 108 விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

அத்தோடு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சந்தர்ப்பங்களில் தொற்றுறுதி செய்யப்படும்  மாணவர்கள்   பரீட்சை எழுதுவதற்காக மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளில் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50