மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிக - குருணாகல் வரையான பகுதியில் இன்று நண்பகல் வரை இலவசமாக பயணிக்கலாம்

Published By: Vishnu

16 Jan, 2022 | 10:51 AM
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிக - குருணாகல் வரையிலான பகுதியில் இன்று நண்பகல் 12 மணி வரை அங்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

May be an image of road

இன்று நண்பகல் 12 மணிக்குப் பிறகு இலகுரக வாகனம் ஏதேனும் இரண்டு பரிமாற்றங்களுக்கு இடையில் பயணித்தால் அதற்கு 100 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்.

கனரக வாகனம் சென்றால் ரூ.150 செலுத்த வேண்டும்.

மேலும் அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமையில் இருந்து குருணாகல் நோக்கி பயணிக்கும் இலகுரக வாகனம் ஒன்றுக்கு 250 ரூபா செலுத்த வேண்டும்.

மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் ஏதேனும் இரண்டு பரிமாற்றங்களுக்கு இடையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் 150 ரூபாவும், மீரிகமையிலிருந்து குருணாகல் வரை பயணிப்பவர்கள் முறையே 350 ரூபா, 550 ரூபா செலுத்த வேண்டும்.

இதற்கான வர்த்தமானி அறிவத்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால், நேற்று (15) பிற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

May be an image of 9 people and people standing

May be an image of 2 people and people standing

40.91 கிலோமீற்றர்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான “அத்துகல்புர நுழைவு”, மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய 05 இடமாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்தப் பகுதியை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையானது, மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. முதற்கட்டமான கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37.9 கிலோமீற்றர் ஆகும்.

மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான தூரம் 32.5 கிலோமீற்றர் தூரமாகும். கொழும்பில் இருந்து கலகெதர வரையான முழு வீதியை, 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் வகையில், மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியின் சுமார் 10 கிலோமீற்றர் தூரம் (25%), தூண்களின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதில் வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்படும் சத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38