மலசல கூடக்குழிக்குள் விழுந்து குழந்தை பலி

Published By: Gayathri

12 Jan, 2022 | 05:06 PM
image

வீட்டுக்கு பின் புறத்தில் புதிதாக வெட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசல கூடக்குழிக்குள் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் ஹபரணை - ஹதரஸ்கொட்டுவை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு வருடமும் 10 மாதங்களான பாக்யா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சிறுமியின் தாய் வேலை நிமித்தம் தனது சகோதரியின் வீட்டில் சிறுமியை விட்டு சென்ற போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டின் பின் புறத்தில் புதிதாக வெட்டப்பட்ட நீர் நிறைந்திருந்த  மலசலகூடக் குழிக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என்ற பதற்றத்தில் வீட்டாரினால் குழந்தையை தேட முற்பட்ட வேளையில் குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைக்காக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51