கடந்த கால அரசியல் நிலைமைகளை மைத்திரிபால நினைவில் கொள்ள வேண்டும் - சேமசிங்க

Published By: Digital Desk 3

12 Jan, 2022 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தொடர்பில்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.

சுதந்திர கட்சியினரது செயற்பாடுகள் குறித்து  அவதானத்துடன் உள்ளோம். சுதந்திர கட்சியினர் கடந்த காலஅரசியல் நிலைமையினை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என  நுண்கடன் மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வருடகாலமாக நித்திரை செய்து விட்டு தற்போது எழுந்துள்ளதை போன்று அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் இறக்குமதியிலும்,விநியோக கட்டமைப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வெளிநாட்டு கையிருப்பும் குறைவடைந்துள்ளன.

பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் முறையான திட்டங்களை வகுத்துள்ளது. அனைத்து சவால்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கம் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுதந்திர கட்சியின தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கத்தின் கொள்கை தவறு என்றால் அவர்கள் தாராளமாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். 

சுதந்திர கட்சியினரது செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியாக சுதந்திர கட்சி அங்கம் வகிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08