இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தீர்மானம்

Published By: Digital Desk 3

12 Jan, 2022 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளின் ஒத்துழைப்புக்களை மேலும் வலுவூட்டுவதற்காகவும் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 05 வருட காலத்தில் 2.89 பில்லியன் இலங்கை ரூபாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, இயலளவு விருத்தி, கலாசார விவகாரங்கள், தொல்லியல் ரீதியான ஒத்துழைப்புக்கள், இலங்கையில் புத்த பிரானின் வணக்கத்திற்குரிய புனித தந்ததாதுக்களை காட்சிப்படுத்தல் மற்றும் இந்தியாவுக்கான பௌத்த யாத்திரைகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கு ஏற்புடைய வகையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் இணைந்த அடையாளங் காணப்படும் கருத்திட்டங்களை இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46