முகமூடி திருடர்களால் பலாத்கார பயம் ; 185 கோடி ரூபா மதிப்புள்ள நகைகள் திருட்டு

04 Oct, 2016 | 08:26 PM
image

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியனின் 185 கோடி ரூபா மதிப்புள்ள நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வைத்து திருடி சென்றுள்ளனர்.

பேஷன் ஷோவை கண்டுகளிக்க அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். 

அவருடன் அவரது சகோதரிகளும் சென்றிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை முகமூடி அணிந்து பொலிஸ் உடையில் இருந்த 5 திருடர்கள் கிம்மின் அறைக்குள் புகுந்தனர்.

திருடர்களை பார்த்த கிம் பயந்துபோய் கையடக்கதொலைபேசியினை கையில் எடுக்க அதை பறித்து வைத்துக் கொண்டு கிம்மை படுக்கையில் இருந்து இழுத்து கை, கால்களை கட்டிப்போட்டு குளியல் அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர்.

ஹோட்டல் அறையில் கிம் வைத்திருந்த சுமார் 185  கோடி மதிப்புள்ள நகைகளை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். அதில் கிம்மின் நிச்சயதார்த்த மோதிரமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரான்ஸ் மொழியில் பேசிய 5 திருடர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என்று கிம் பயந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08