கிறிஸ்து பிறப்பை கொண்டாட இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்து கோலாகல நத்தார் விழா மாநகரசபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையல் நடைபெற்றது. 

இவ்விழாவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்கின்ற வேத வாக்கியத்திற்கேற்ப இயேசுவை விசுவாசிக்கும் யாரையும் அவர் மறப்பதில்லை. மிகவும் எளிய நிலையில் உள்ள யாவரையும் நாம் கனம் பண்ணவேண்டும் அதனால்தான் இயேசு மாட்டுத் தொழுவத்தில் மிகவும் எளிமையாகப் பிறந்தார். ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு போர் செய்யும் போர் வீரர்கள் நத்தார் பண்டிகை காலத்தின்போது துப்பாக்கிகளை கீழே வைத்து விட்டு மதுரசம் மற்றும் இனிப்புப் பண்டங்களைப் பரிமாறி இயேசுவின் தியாகம் மற்றும் அன்பு என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்ககோடு போர் மௌனித்து இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.