12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படும் - விசேட வைத்திய நிபுணர் டி.எம்.ஜயலத்

Published By: Digital Desk 3

11 Jan, 2022 | 09:50 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் நாளை புதன்கிழமை கொழும்பு தேஸ்டன் வித்தியாலயத்தில் ஆரம்பமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் டி.எம்.ஜயலத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2010 ஜனவரி 7 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் நாளை புதன்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தேஸ்டன் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரு கட்டங்களாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் அன்றைய தினம் பாடசாலைகளில் தடுப்பூசி வழங்க முடியாது. 

எனவே நாளை முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய நாளை தேஸ்டன் வித்தியாலயத்திலும் , 13 ஆம் திகதி விசாகா வித்தியாலயத்திலும் , 14 ஆம் திகதி யசோதரா வித்தியாலயத்திலும் , 18 ஆம் திகதி ரோயல் கல்லூரியிலும் , 19 ஆம் திகதி நாலந்தா வித்தியாலயத்திலும் , 20 ஆம் திகதி ஆனந்தா கல்லூரியிலும் , 21 ஆம் திகதி தேவி பாலிகா வித்தியாலயத்திலும் , 23 ஆம் திகதி இந்து மகளிர் கல்லூரியிலும் , 24 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திலும் , 25 ஆம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவை கல்லூரியிலும் , 26 ஆம் திகதி ஹோலி பெமிலி வித்தியாலயத்திலும் , 27 ஆம் திகதி டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்திலும் , 28 ஆம் திகதி முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திலும் , 29 ஆம் திகதி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் , 30 ஆம் திகதி மஹாநாம வித்தியாலயத்திலும் , 31 ஆம் திகதி மீண்டும் ஆனந்தா வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இதேபோன்று பெப்ரவரி முதலாம் திகதி புனித ஜோசப் கல்லூரியிலும் , 2 ஆம் திகதி கோதமி வித்தியாலயத்திலும் , 3 ஆம் திகதி சாஹிரா வித்தியாலயத்திலும் , 5 ஆம் திகதி புனித பீட்டர் வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய பெப்ரவரி 5 ஆம் திகதியுடன் முதலாம் கட்டம் நிறைவடைகிறது. 

இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் உயர்தர பரீட்சை நிலையங்கள் அல்லாத பாடசாலைகளில் இடம்பெறும். மார்ச் 3 ஆம் திகதிக்கு பின்னர் எஞ்சிய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04