பிரித்தானியாவில் பாலியல் தொழில் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் கிரேக்க நாட்டு பிரதமருக்கு ரூ.130 கோடி கடன் கொடுத்து உதவியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் நகரில் அச்சில்லேவ்ஸ் (66) என்ற நபர் விபச்சார விடுதியொன்றை அமைத்து பாலியல் தொழிலை நடத்தி வருகிறார்.லிப்ரா கிளப் எனப்பெயரிடப்பட்ட அந்த விடுதி மிகவும் பிரபலமானதாகும். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 20 பெண்கள் இந்த பாலியல் தொழில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

ஒரு நாளில் மட்டும் வழக்கறிஞர்கள், வைத்தியர்கள் என 200 வாடிக்கையாளர்கள் குறித்த விடுதிக்கு வந்து செல்கின்றனர்.இந்த தொழில் மூலம் உரிமையாளர் இதுவரை 7 மில்லியன் பவுண்ட் வரை சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டும் இந்த விடுதியை பொலிஸார் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் சோதனை செய்துள்ளனர்.அப்போது, சட்டவிரோதமாக அவர் தொழில் செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உரிமையாளர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, சுமார் 131 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்த அந்த பணம் எங்கே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்கு உரிமையாளர் ‘ஆமாம், இந்த தொழிலில் 131 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தேன்.

ஆனால், கிரேக்க நாடு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால், இப்பணம் முழுவதையும் கிரேக்க பிரதமரான அலெக்சஸ் சிப்ராஸிற்கு கடன் கொடுத்து உதவியதாக’ உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது எந்தளவிற்கு உண்மையானது, உரிமையாளரின் இந்த தகவலுக்கு கிரேக்க பிரதமர் பதில் அளித்தாரா என்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

உரிமையாளர் மீதான வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.