டெல்லி சீனத் தூதரக கடிதத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

Published By: Digital Desk 4

10 Jan, 2022 | 03:24 PM
image

(ஏ.என்.ஐ)

நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற குழு நடத்திய இரவு விருந்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீன தூதரகம் எழுதிய கடிதத்திற்கு இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததுள்ளது.

மற்றும் 'கடிதத்தின் பொருள், தொனி மற்றும் காலம்  என்பன பொருத்தமற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனத் தரப்பு எம்.பி.க்களின் இயல்பான நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இருதரப்பு உறவுகளில் நிலைமையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்பதை சீனத் தரப்பு நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சீன தூதரகத்தில் உள்ள அரசியல் ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நிகழ்வில் பங்கேற்பது குறித்து கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் பொருள், தொனி மற்றும் காலம் ஆகியவை பொருத்தமற்றவை என்றும் கூறினார்.

டிசம்பரில் நடந்த  இந்த இரவு விருந்தில், திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் மேனகா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் நிகழ்ச்சியில் கலந்து கொணட  எம்.பி.க்கள் குறித்து தனது கடிதத்தில் 'கவலை' தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திபெத்திய அரசின் செய்தி தொடர்பாளர் டென்சின் லெக்ஷாய் சீனாவை கடுமையாக சாடினார்.

திபெத்துக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஒற்றுமை சீனாவை சங்கடப்படுத்துகிறது. திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற மன்றத்தைப் பொறுத்தவரை, இது 1970 இல் தொடங்கப்பட்டது. இப்போது பிஜேடி எம்பி சுஜீத் குமார் தலைமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17