மேல்முறையீட்டு வழக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி

Published By: Vishnu

10 Jan, 2022 | 01:21 PM
image

அவுதிரேலியாவில் இருந்து தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

Novak Djokovic before a Davis Cup match in Austria last year.

அவுஸ்திரேலிய பெடரல் நீதிபதி அந்தோனி கெல்லி திங்களன்று அவசர மெய்நிகர் நீதிமன்ற விசாரணையின்போதே குறித்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வாசித்தார். 

அந்த வாசிப்பில் நீதிபதி, ஜோகோவிச் விசா இரத்து தொடர்பான அவுஸ்திரேலிய அதிகாரிகளின் முடிவினை நிராகரித்தார்.

உலகின் நம்பர் வன் டென்னிஸ் நட்சத்திரமான ஜோகோவிச் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னர் அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு விடுதியில் நான்கு இரவுகளைக் கழித்தார்.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்பவர் செர்பியாவைச் சேர்ந்த 34 வயதாகும் நோவக் ஜோகோவிச். கிராண்ட் ஸ்லாம் போட்டித்தொடர்களுள் ஒன்றான ‘அவுஸ்திரேலிய ஓபன்’ வரும் ஜனவரி 17ம் தேதி தொடங்க இருக்கிறது. நடப்பு சாம்பியனான ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வதற்காக டுபாய் வழியாக மெல்போர்ன் விமான நிலையத்தை வியாழன் அன்று சென்றடைந்தார்.

அவுஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என போட்டி அமைப்பும், அவுஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டுள்ளது. 

அதே நேரத்தில் நோவக் ஜோகோவிச் மெல்போர்ன் வந்த பின்னர் அவருடைய விசாவை அவுஸ்திரேலிய அரசு அதிரடியாக இரத்து செய்தது. 

அவர் அவுஸ்திரேலியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, மெல்போர்ன் விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதற்காக ஆஸி ஓபன் போட்டி அமைப்பிடம் இருந்து சிறப்பு விலக்கு பெற்றுள்ளதாக ஜோகோவிச் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், என்ன மருத்துவ காரணத்திற்காக அவர் விலக்கு பெற்றிருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

இதனிடையே அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் நுழைவதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க தவறிவிட்டார்.  எனவே அவரின் விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்கள் அல்லாத வெளிநாட்டினர் தகுந்த விசா வைத்திருக்காவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் ஏற்கனவே 9 முறை அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருக்கும் ஜோகோவிச், அவுஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41