கடுமையான வலியை தெரியாமல் செய்யவும் மன உளைச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் எல்லைகடந்த அபின் சார்ந்த மருந்துகள் மற்றும் ஹெரோயின் பயன்பாட்டினால் கடந்த (2014) ஆண்டில் மட்டும் 47,055 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

உள்நாட்டு கள்ளச்சந்தையில் குறைந்த விலையில் அதிகவீரியம் மிக்க ஹெரோயின், அபின் சார்ந்த மருந்துகள் தாராளமாக காணப்படுவதால் இதைப்போன்ற இறப்புகள் அதிகரித்து வருகின்றது. 

இவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.