மாலைத்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்ட மீனவர்கள் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

09 Jan, 2022 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

சீரற்ற காலநிலை காரணமாக விபத்திற்குள்ளான 'அசேல புதா 2' என்ற மீன்பிடிப்படகிலிருந்த 5 மீனவர்களும், இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் எம்.வி. பி.ஜி.சீ. பெரிக்லிஸ் (ஐ.எம்.ழு. 9796171) என்ற வெளிநாட்டு கப்பல் ஊடாக காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக காலி - கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் படகு விபத்திற்கான காரணம் மற்றும் காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு,  மாலைத்தீவின் கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பேருவளை கடற்பரப்பிலிருந்து கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் 4 ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக 6 மீனவர்களுடன் சென்ற 'அசேல புதா 2' என்ற படகுடனான அனைத்து தொடர்புகளும் இம்மாதம் முதலாம் திகதி முதல் துண்டிக்கப்பட்டன. 

எனவே இந்த படகு ஏதேனும் விபத்திற்கு உள்ளாகியுள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு பேரூவளை பொலிஸார் மற்றும் மீன்பிடி மற்றும் நீர்வழங்கல் திணைக்களம் கடந்த 4 மற்றும் 5 ஆம் திகதிகளி; கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கமைய இலங்கை கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு வலயத்தை அண்மித்துள்ள இந்திய மற்றும் மாலைத்தீவு கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு இலங்கை கடற்படையினரால் இது குறித்து அறிவிக்கப்பட்டது. 

அதனையடுத்து மாலைத்தீவிற்குரிய கடற்பரப்பில் இந்தியாவின் போர்ட் பிலேயர் துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எம்.வி. பி.ஜி.சீ. பெரிக்லிஸ் கப்பலின் கெப்டன் கடந்த 7 ஆம் திகதி இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

காலியிலிருந்து 332 கடல் மைல் தூரத்தில் மாலைத்தீவு கடற்பரப்பில் சீரற்ற காலநிலை காரணமாக விபத்திற்கு உள்ளான படகிலிருந்து ஐந்து இலங்கை மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக மேற்குறிப்பிட்ட கப்பலின் கெப்டன் தகவல் வழங்கியுள்ளார். 6 மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் , ஏனைய ஐவரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு காலி துறைமுகத்தை வந்தடைந்த ஐந்து மீனவர்களும் சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் மற்றும் காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் தொடர்பான அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படை தலைமையகத்தின் கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் மாலைத்தீவின் கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மீட்ககப்பட்ட மீனவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இது குறித்து எம்.வி. பி.ஜி.சீ. பெரிக்லிஸ் கப்பலின் கெப்டன் மாலைத்தீவின் கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01