கோவில் திருவிழா பின்னணியில் விஜய்யும், கீர்த்தி சுரே{ம் நடனம் ஆடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. 

இந்நிலையில், ‘பைரவா’ சென்னை பின்னி மில்லில் கோவில் கோபுரம் போன்ற பிரம்மாண்ட அரங்கு அமைத்துள்ளனர். கோவில் திருவிழா பின்னணியில் விஜய்- கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவது போல் படமாக்கவிருக்கிறார்களாம். இதன் படப்பிடிப்பு இன்று நடைபெறவிருக்கிறது. 

இந்த பாடல் காட்சியை படமாக்கிய பிறகு படக்குழுவினர் வெளிநாட்டில் ஒரு பாடலை படமாக்கவிருக்கிறார்களாம். அதோடு, இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என தெரிகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.