இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் விரிவுப்படுத்தப்படும் - தென் கொரிய பிரதமர்

Published By: Digital Desk 3

08 Jan, 2022 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை தென்கொரிய அரசாங்கம்  தீவிரமாக ஆராயும் என  தென் கொரிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சியோலில் கொரிய பிரதமருடனான சந்திப்பின் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால், 'இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு' விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அந்நாட்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது தென் கொரியாவில் சுமார் 22,000 இலங்கையர்கள் தொழில்புரிகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 520  மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் எமது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக தென் கொரியாவிற்கு இலங்கைத் தொழிலாளர்கள் திரும்புவது இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் படிப்படியாகத் திரும்புவதற்கு அனுமதித்தமைக்காக கொரியாவிற்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து இரண்டு தொகுதியினர் சியோலுக்கு வருகை தந்துள்ளதாகவும், முதலாவது தொகுதியினர் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதியும், இரண்டாவது தொகுதியினர் டிசம்பர் 22 ஆம் திகதியும் கொரியாவை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈ.பி.எஸ். திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விரிவாக்கப்பட்ட வாய்ப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அவர், அனைத்து சாதனை நோக்கங்களுக்காகவும் 16 தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளில் வாராந்த அடிப்படையில் சியோலுக்கு நேரடியாகச் செயற்படும் ஒரே தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டினார்.

கொரியாவில் 80 இற்கும் குறைவான இலங்கைப் பணியாளர்கள் இதுவரை கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கையில் பின்பற்றப்பட்ட சுகாதார நடவடிக்கைகளின் செயற்றிறனை வெளிப்படுத்துவதாகவும் அவர்  வலியுறுத்தினார்.

கொரியாவில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதுடன், சியோலுக்கு அடுத்தடுத்து வரும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என  அவர் கேட்டுக் கொண்டார்.

1970 ஆம் ஆண்டில், கொரியாவின் மொத்த ஏற்றுமதிகள் சுமார் 835 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், 2019ஆம் ஆண்டில் ஐந்து தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் ஏற்றுமதியின் பெறுமதி 610 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளமையை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக் காட்டினார்.

இது உலகின் எந்தப் பகுதியிலும் சில  இணைகளுடன் ஒரு அற்புதமான அதிகரிப்பைக் குறித்து நிற்கின்றது. இலங்கைத் தொழிலாளர்களின் தொழில், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை இந்த சாதனைக்கு ஓரளவு பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை தென்கொரிய அரசாங்கம்  தீவிரமாக ஆராயும் என கொரிய பிரதமர் தெரிவித்தார்.

கொரியக் குடியரசின் பிரதமருக்கும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் அரசியல் விவகாரங்கள்,  வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அரங்குகளிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56