இலங்கையின் தொழில்சார் கல்வி முன்முயற்சிகளுக்கான உதவிகள் குறித்து கொரியா பரிசீலிக்கும் - பீரிஸ்

Published By: Digital Desk 3

07 Jan, 2022 | 03:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு  பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, கொரிய பிரதி பிரதமர் யூ யூன் ஹை இதனைத் தெரிவித்தார்.

கொய்க்கா மற்றும் கொரிய எக்சிம் வங்கி ஆகிவற்றின் தலைமையிலான வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகள் போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது தெரிவித்தார். இந்த வேலைத்திட்டங்களினால் இலங்கைக்கு கிடைத்த நன்மைகள் குறித்து அமைச்சர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கொரியாவில் பணிபுரியும் 22 000 இலங்கையர்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ் , இலங்கையில் கொரிய மொழியின் புலமையை நோக்கமாகக் கொண்ட கற்பித்தல் நிகழ்ச்சிகளின் பிரபல்யம் குறித்து சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கொரிய மொழி ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கொரிய பிரதி பிரதமர் யூ யூன் ஹை, இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியா பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31