பேஸ்புக்கில் காணொளி குறுந்தகவல் மூலம் வைரஸ் ஒன்று பரவி வருகின்றது.இதன் காரணமாக பேஸ்புக் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த வைரஸ் ஆனது உங்கள் பேஸ்புக் கணக்கிற்கு உங்களின் பேஸ்புக் நண்பர் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்புவது போல் வரும்.  

குறித்த குறுந்தகவலில் தங்களது பேஸ்புக் முகப்பு படத்தில் காணப்படும் நிலையில், அதனை ஆர்வத்துடன் அழுத்தி பார்வையிடுவதன் மூலம் இந்த வைரஸ் பரவுகின்றது.

நீங்கள் குறித்த குறுந்தகவலினை அழுத்தியதும் இது தன்னிச்சையாக தமக்குரிய நண்பர்களுக்கு குறுந்தகவலாக செல்கின்றது. 

மேற்கூறப்பிட்டதை போன்ற  குறுந்தகவல் வரும்  நிலையில் அதனை அழுத்தி பார்வையிடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் .

மேலும், சில ஆபாச இணையதளங்களும் பேஸ்புக் பக்கங்களும் சில வீடியோக்களை பகிர்கின்றன.

சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு செயலியினை செயற்படுத்துவதற்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது.

அதன் மூலமாக பேஸ்புக் கணக்கிற்கு வைரஸ் ஏற்றப்பட்டு தங்களின் கணக்கில் குறித்த ஆபாச இணையத்தளத்தின் வீடியோக்கள் தங்களது பெயர்களில் தங்களின் நண்பர்களையும் இணைத்து பகிரப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.