ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றிக் கொள்ள முடியும் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

Published By: Digital Desk 3

07 Jan, 2022 | 12:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு கசிவுடனான  வெடிப்பு சம்பவம் தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, எரிவாயு வெடிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இன்னும் இரு வாரத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றிக் கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

குருநாகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற பாடசாலை கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் என்ற ரீதியில் ஆட்சிபொறுப்பை ஏற்கும் ஒவ்வொரு முறையில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டு வெற்றிக்கண்டுள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிறந்த திட்டமிடல் ஊடாக கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடிந்துள்ளது.

கொவிட-19 வைரஸ் தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டத்தில் இலங்கை பலம் வாய்ந்த நாடுகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது.

மூன்றாம் கட்ட செயலூட்டி தடுப்பூசி செலுத்தும் பணிகளும், 12-15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

புதிய வருடத்தில் புதுவிதமாக சிந்தித்து சவால்களை வெற்றிக் கொள்வது அவசியமாகும்.கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு என்ற ரீதியில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.

வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோக கட்டமைப்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.இது தற்காலிக பிரச்சினையாகும்.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் பிறிதொரு பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.கொழும்பு –ஏழு பகுதியிலும்,வடக்கிலும், குருநாகல் பகுதியிலும் சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் இடம்பெறவில்லை. இருப்பினும் வெவ்வேறு பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் காரணமாக நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.இன்னும் இரு வார காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்.

நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சகல சவால்களையும் வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06