வருமானமின்றி செலவுகளை மாத்திரம் அதிகரிக்கும் வகையிலான நிதியமைச்சரின் அறிவிப்பின் பின்னாலுள்ள பிரதான நோக்கம் என்ன? - எஸ்.எம்.மரிக்கார்

Published By: Digital Desk 3

07 Jan, 2022 | 12:45 PM
image

(நா.தனுஜா)

அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கலாக நிதியமைச்சரினால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி எவ்வாறு திரட்டிக்கொள்ளப்படும் என்பது குறித்துத் தெளிவுபடுத்தப்படவில்லை.

எனவே, மத்திய வங்கியின் ஊடாகப் புதிதாகப் பணத்தை அச்சிட்டு இக்கொடுப்பனவுகளை வழங்கும் பட்சத்தில் பணவீக்கம் உயர்வடைந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அதன் சுமையை மேலதிக கொடுப்பனவு எதனையும் பெறாத தனியார்துறையினர், அன்றாடக்கூலித்தொழிலாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் பாதிக்கும். 

எனவே அவர்களுக்கு நிதியமைச்சர் வழங்கவிருக்கும் நிவாரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், மாகாணசபைத்தேர்தல்களை இலக்குவைத்து உரியவாறான திட்டமிடலின்றி அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா? என்றும் வினவியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், இந்த வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்குவதற்கு எதுமில்லை என்றும் மாறாக மக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இப்போது அவர் பொதுமக்களுக்கான பல்வேறு நிவாரணக்கொடுப்பனவுகளை அறிவித்திருக்கின்றார். இக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி வருமானத்தை எவ்வாறு திரட்டிக்கொள்வீர்கள் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரால் பதிலளிக்கமுடியவில்லை.

ஆகவே வருமானத்தைத் திரட்டிக்கொள்வதற்கான திட்டங்கள் எவையுமின்றி செலவுகள் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஈடுசெய்வதற்காக மத்திய வங்கியினால் புதிதாக பணம் அச்சடிக்கப்படும். அதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும்.

ஆகவே புதிய நிவாரணக்கொடுப்பனவுகள் தொடர்பான அறிவிப்பின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் என்னவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தவேண்டிய அவசியமேற்பட்டுள்ள நிலையில், அதனை இலக்குவைத்து அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா?

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக புதிதாக பணம் அச்சடிக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகள் உயர்வடையும்.

ஆனால் அவ்விலையேற்றம் மேலதிக கொடுப்பனவைப்பெற்ற அரச ஊழியர்களை மாத்திரமன்றி தனியார்துறை ஊழியர்கள், அன்றாடக்கூலித்தொழிலாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் பாதிக்கும்.

ஆகவே அவர்கள் முகங்கொடுக்கவுள்ள வாழ்வாதார நெருக்கடிக்கு ஏழு மூளைகளையுடைய பசில் ராஜபக்ஷ வழங்கப்போகின்ற தீர்வு என்ன? அதுமாத்திரமன்றி பணவீக்கம் உயர்வடையும்போது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் நாம் மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களின் பெறுமதி மேலும் அதிகரிக்கும்.

மறுபுறம் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கான வரி நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தற்போது கிடைக்கப்பெறும் வருமானத்தை இழப்பதற்கும் செலவுகளை மேலும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான போதியளவு பணம் இல்லாத நிலையில், அவற்றுக்கான வரிகளை நீக்குவதால் என்ன பயன்?

இவ்வாறானதொரு நெருக்கடிநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய இயலுமையுடையவர்கள் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அதற்கான தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே வழங்கமுடியும் என்பதையும் மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி இந்த நெருக்கடியிலிருந்து எம்மால் ஒருபோதும் மீளமுடியாது.

ஆகவே அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியைப்போன்று சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்று ஆட்சிபீடமேறுவது அவசியமாகும் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51