உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது

07 Jan, 2022 | 04:36 PM
image

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்துள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,06,08,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,74,75,429 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 54 இலட்சத்து 89 ஆயிரத்து 288 பேர் மரணித்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 3,76,44,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,859 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இலஙகை, ஐஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா  - தொற்றார்கள் - 5,95,04,107, மரணங்கள் -  8,55,649, குணமடைந்தோர் - 4,20,83,056

இந்தியா  -    தொற்றார்கள் -  3,52,23,770, மரணங்கள் -  4,82,911, குணமடைந்தோர் - 3,43,59,227

பிரேசில்   -    தொற்றார்கள் -  2,23,95,322, மரணங்கள் -  6,19,730, குணமடைந்தோர் - 2,15,67,845

இங்கிலாந்து - தொற்றார்கள் - 1,40,15,065,மரணங்கள்- 1,49,515, குணமடைந்தோர் - 1,06,20,728

பிரான்ஸ்      - தொற்றார்கள் -  1,11,83,238, மரணங்கள் - 1,25,013, குணமடைந்தோர் - 83,94,031

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

ரஷ்யா - 1,06,01,300

துருக்கி - 97,87,274

ஜெர்மனி - 73,99,003

இத்தாலி - 69,75,465

ஸ்பெயின் - 69,22,466

ஈரான்  -  62,03,046

அர்ஜெண்டினா - 60,25,303

கொலம்பியா - 52,42,672

இந்தோனேசியா - 42,64,669

போலந்து - 41,79,292

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52