பிரதமர் மோடிக்கான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தலைமைகள் கைச்சாத்து

07 Jan, 2022 | 06:57 AM
image

(ஆர்.ராம்)

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை வழங்க வேண்டும் என்பதோடு, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ எனும் தலைப்பிலான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்ரூபவ் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா இன்றையதினம் கைச்சாத்திடவுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இந்த ஆவணத்தில் கைச்சாத்திடாதபோதும் தாம் தமிழ் பேசும் மக்களின் பொதுப்படையான விடயங்களில் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பில் தொடந்தும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோவின்) முன்னெடுப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டு ஆவணத்தினை அனுப்புவதற்கான செயற்பாட்டில், கடந்த டிசம்பர் 21ஆம் திகதி குளோபல் டவர் விடுதியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இறுதி செய்யப்பட்ட ஆவணத்திற்கான வரைவு 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் செம்மைப்படுத்தப்பட்டு அனைத்து தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கபடப்டிருந்தது.

‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ எனும் தலைப்பிலான ஏழுபக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தினை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தபோதும் முஸ்லிம், மலைய மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்தியபோது அதில் அவ்வினக்குழுமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு கரிசனைகள் காணப்பட்டிருந்தன.

இதனால், அவர்களது கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு பிறிதொரு ஆவணம் கடந்த முதலாம் திகதி தயாரிக்கப்பட்டபோதும் அதனை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருந்தது.

இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தொடர்ச்சியாக மனோகணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

அதேநேரம், மனோகணேசனும் தனது கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார். அதேபோன்று ரவூப் ஹக்கீமும் தனது கட்சியில் தன்னுடைய நம்பகரமான தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

ஈற்றில், நேற்று வியாழக்கிழமை, முற்பகலில் மனோகணேசன், ஹக்கீம். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து தமிழரசுக்கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தில் காணப்பட்ட கரிசனைகள் தொடர்பில் வெளிப்படுத்தியதோடு தாம் ‘வெளியில் இருந்து’ ஆதரவினை வழங்குவதாக தெரிவித்தனர்.

அத்துடன், தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் எதிர்காலக் கூட்டுச் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் வெளியிட்டனர்.

இதனையடுத்து, நேற்று மாலையில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்திருந்தனர். இதன்போது, முஸ்லிம், மலையக தரப்பினரது கரிசனைகளை வெளிப்படுத்தியவர்கள், தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொண்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பிலான ஆவணத்தினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அதில் கையொப்பமிட்டு அனுப்புவதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது பொருத்தமல்ல என்றும் குறிப்பிட்டனர்.

ஆதனை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்டார். தொடர்ந்து சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கையொப்பமிட்டனர். அதேநேரம், விக்னேஸ்வரன், சுரேஸ், சிறீகாந்தா ஆகியோரும் கையொப்பத்தினை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு விரைந்துள்ள மாவை.சோ.சேனாதிராஜா இன்றையதினம் கையொப்பமிடவுள்ளார். இதனையடுத்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கான கூட்டு ஆவணம் கையளிக்கப்படவுள்ளது. 

இந்தச் செயற்பாடு சம்பந்தன் தலைமையில் சில தினங்களுக்குள் இடம்பெறவுள்ளது.

மேற்படி விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் உறுதிப்பத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33