வெலிக்கடை வழக்கின் தீர்ப்புக்கு முன் பிரதிவாதி ரங்க ஜீவவுக்கு பதவி உயர்வு

Published By: Digital Desk 3

06 Jan, 2022 | 09:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சமூக படு கொலைகள் தொடர்பிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பதாக, அவ்வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

6 ஆம் திகதி அவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில்  (தற்போது 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது) நேற்று ( 5) ஆம் திகதி  இந்த பதவி உயர்வுக்கான உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பிறப்பித்துள்ளார்.

அதன்படி  தற்போது பொலிஸ் மேலதிக படைப் பிரிவில் பொலிஸ் பரிசோதகராக இருக்கும் நியூமால் ரங்க ஜீவ,  2020 ஜனவரி முதலாம் திகதி  முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்படுவதாக  பொலிஸ் மா அதிபர்  அறிவித்துள்ளார். 

நீண்ட நாட்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முகமாக இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை  படுகொலை விவகாரத்தில்,  முன்னால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ மற்றும்  மெகஸின் சிறைச்சாலையின்  முன்னாள் அத்தியட்சர்  லமாஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை  நீதிமன்றினால் நேற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21