பாலியல் தொந்தரவு ; பணிநீக்கப்பட்ட ஹோட்டல் பணிப்பெணிற்கு 94 இலட்சம் ரூபா இழப்பீடு

04 Oct, 2016 | 12:13 PM
image

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த பெண்ணிற்கு 93 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரீஸில் உள்ள பார்க் ஹயாத் பாரிஸ்-வெண்டோமே என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் சுத்தம் செய்பவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு யூலை மாதம் கட்டார் நாட்டை சேர்ந்த இளவரசர் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அப்போது இளவரசரின் பாதுகாவலர் ஒருவர் இப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். ஆனால், பணிப்பெண் அவரின் இச்சைக்கு இணங்க மறுத்தமையால் அவரை இளவரசியின் பாதுகாவலர் மிரட்டியுள்ளார்.

இதனால் மனம் உளைச்சலுக்கு உள்ளான அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த மோசமான சம்பத்திற்கு பிறகு அவர் அடிக்கடி விடுமுறையெடுத்துள்ளார். பணிப்பெண் சரியாக பணிக்கு வராத காரணத்தினால் அவரை மற்றொரு ஹோட்டலுக்கு இடமாற நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், அப்பெண் இடமாற சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் பணிப்பெண்ணை உடனடியாக பணியில் இருந்து நீக்கியது.

பல்வேறு இன்னல்களுக்குள்ளான தன்னை பணியில் இருந்து நீக்கியது தவறானது எனக்கூறி அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அண்மையில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘பணிப்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

இதனால் தாக்குதலை நடத்தியவர் பிரான்ஸ் நாட்டை விட்டு தப்புவதற்கு ஹோட்டல் நிர்வாகம் உதவியுள்ளது.

மேலும், ஹோட்டலில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்புகளை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை.

அதேசமயம், சரியான காரணமின்றி பணிப்பெண்ணை பணியில் இருந்து நீக்கியது தவறு எனக்கூறிய நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 57,000 யூரோ(இலங்கை மதிப்பில் சுமார் 94 இலட்சம் ரூபா ) இழப்பீடு வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08