உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் உயிரிழப்பு

Published By: Vishnu

05 Jan, 2022 | 09:26 PM
image

(எம்.எப்.ம்.பஸீர்)

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்புகளைப் பேணியமையை மையப்படுத்தி குறித்த சந்தேக நபர் கடந்த 2019 மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  

அன்று முதல் தடுப்புக் காவலின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டுள்ள சந்தேக நபர், கடந்த 2021 ஏபரல் 6 ஆம் திகதி, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே சந்தேக நபர் கடந்த 2011 நவம்பர் 23 ஆம் திகதி சுகயீனம் காரணமாக  சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பின்னர்  கடந்த 2021 டிசம்பர் 5 ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மற்றப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. 

இந் நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார்  நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர், சிறுநீரகம் சார் பிரச்சினைக்காகவே சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது சாந்த நோய் நிலைமையே மரணத்துக்கு காரணம் எனவும் சிறைச்சாலையின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04