மக்கள் ஆட்சியை மீண்டும் ஸ்தாபிக்க சிறந்த தருணம் - விஜேதாச ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

05 Jan, 2022 | 07:53 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்குள் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்கள் கூட நிறைவேற்றதிகாரத்தை விமர்சிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிறைவேற்றதிகாரத்தை முற்றாக இல்லாதொழித்து சில மாதங்களுக்குள் மீண்டும் மக்கள் ஆட்சியை அமைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறைவேற்றத்திகார முறைமையை நடைமுறைப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, 'அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், தீர்ப்பினை வழங்கிய நீதிபதியின் இல்லத்திற்கு சென்று கல்லால் தாக்கி கூச்சலிடும் அடிப்படை உரிமை நாட்டு மக்களுக்கு காணப்படுகிறது.' என்று தெரிவித்துள்ளார். அந்த ஏகாதிபத்தியம் தற்போது மேலும் விஸ்திரமடைந்து உச்ச நிலைமையை அடைந்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்குள் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்கள் கூட நிறைவேற்றதிகாரத்தை விமர்சிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே உண்மையில் நாட்டையும் , நாட்டு மக்களையும் நேசிக்கும் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பார்களாயின், அவர்களுக்கு நிறைவேற்றதிகாரத்தை முற்றாக இல்லாதொழித்து சில மாதங்களுக்குள் மீண்டும் மக்களுக்கு சார்பான ஆட்சியை அமைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

அரசாங்கம் என்பது மக்களின் விருப்பத்திற்குரியதாக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு மக்களுக்கு குரல் கொடுப்பதை துரோகமாக அரசாங்கம் கருதுமாயின் , அதன் பொருள் அரசாங்கம் மக்களுக்கு துரோகமிழைக்கிறது என்பதாகும்.

நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களுக்கு பதவிகள் பெரிதல்ல. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் , எனது அமைச்சு பதவியும் பறிக்கப்பட்டது. அதன் போது எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியை காணாமல் போகச் செய்வேன் என்று அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுத்தேன். மக்களை அதனை செய்துள்ளனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றியதால் கிடைக்கப் பெற்ற ஆசீர்வாதத்தின் ஊடாக, நிறைவேற்றதிகாரத்தின் ஆயுட் காலத்தை சில மாதங்களுக்கானதாக மட்டுப்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒருபோதும் இந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பொறுப்பேற்க மாட்டேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58