அரசாங்கத்திற்கு விருப்பமில்லையென நேரடியாகத் தெரிவித்தால் நாம் அமைச்சுப் பதவியைவிட்டு விலகுவோம் - வாசு 

Published By: Digital Desk 3

06 Jan, 2022 | 04:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தில் எமக்கு இணக்கம் இல்லை என்றால் அதுதொடர்பில் மாற்றுக்கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்க வேண்டும். அத்துடன் சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியது எமக்கான முன்னெச்சரிக்கை என நினைக்கவில்லை.

நாங்கள் அமைச்சு பதவி வகிப்பது அரசாங்கத்துக்கு அசெளகரியம் என்றால் அதனை எமக்கு நேரடியாக தெரிவித்தால், நாங்கள் அமைச்சு பதவியை விட்டு விலகுவோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கியது, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கான எச்சரிகையாக இருக்கலாமா என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தில் எமக்கு உடன்பாடு இல்லை என்றால், அதுதொடர்பில் மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கவேண்டும்.

கருத்து தெரிவிப்பது அரசாங்கத்தை விமர்சிப்பதாக தெரிவிக்கமுடியாது. குறிப்பாக யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் எமக்கு இணக்கம் இல்லை என அமைச்சரவையில் நாங்கள் தெரிவித்திருந்தோம். 

அதனால் அதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் உரிமை எமக்கு இருக்கின்றது. அதற்காக நாங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதாக தெரிவிக்கமுடியாது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவின் அமைச்சுப்பதவி  எந்த காரணத்துக்காக பரிக்கப்பட்டது என தெரியாது. அவர் இறுதியாக தெரிவித்த கருத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்,  பொதுஜன பெரமுன கட்சி விசாரணை மேற்கொண்டு இதனை செய்திருக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.

அமைச்சரவை தீர்மானத்துக்கு மாற்றமாக அமைச்சர்களுக்கு செயற்படமுடியாது. என்றாலும் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு இணக்கப்பாடு இல்லை என்றால், அதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் உரிமையை நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நாட்டின் ஜனநாயகத்தன்மையை அந்த இடத்துக்கு கொண்டுவரவேண்டும். 

அத்துடன் அமைச்சரவையில் இருந்துகொண்டு எமக்கு மாற்று கருத்து தெரிவிக்க முடியாது என்றால், அது எமது அரசியலுக்கு மேற்கொள்ளும் பாரிய பாதிப்பாகும்.

எமது மனசாட்சிக்கும் முரணாகும். மாற்று கருத்து தெரிவிப்பது தவறு என்றால் இதுதொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கலாம். 

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக எடுத்திருக்கும் நடவடிக்கை எமக்கான முன்னெச்சரிக்கையாக நாங்கள் பார்க்கவில்லை. அரசாங்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறு கட்சி.

அரசாங்கத்துடன் எங்களுக்கு ஒப்பந்தம் ஒன்று இருக்கின்றது. ஆனால் சுசில் பிரேமஜயந்த பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்.

அத்துடன் சுசில் பிரேமஜயந்தவுக்கான நடவடிக்கை எமக்கான எச்சரிக்கையாக இருக்க தேவையில்லை. நாங்கள் அமைச்சு பதவி வகிப்பது அரசாங்கத்துக்கு அசெளகரியம் என்றால். அதனை எமக்கு நேரடியாக தெரிவித்தால், நாங்கள் அமைச்சு பதவியை விட்டு விலகுவோம்.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு தெரிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. என்றாலும் சுசில் பிரேமஜயந்தவின் அமைச்சுப்பதவி  எந்த காரணத்துக்கு பரிக்கப்பட்டது என எனக்கு தெரியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47