படர்தாமரையை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்

Published By: Robert

04 Oct, 2016 | 10:04 AM
image

நலம் தரும் நாட்டு மருத்­து­வத்தில் படர்­தா­ம­ரையை குணப்­ப­டுத்தும் மருத்­துவம் குறித்து பார்க்­கலாம். குப்­பை­மேனி, கீழா­நெல்லி, தும்பை, பூண்டு ஆகி­யவை படர்­தா­ம­ரைக்கு மருந்­தா­கி­றது. வட்­ட­மாக, திட்­டுத்­திட்­டாக காணப்­படும் படர்­தா­மரை தோலில் அரிப்பு, சிவந்த தன்­மையை கொடுக்க கூடி­யது. படர்­தா­மரை ஏற்­பட பூஞ்சை காளான்கள் கார­ண­மா­கி­றது. இது உடலில் பரவி தோல் நோயை ஏற்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. படர்­தா­மரை நாள­டைவில் சொரி­யா­சி­ஸாக மாறி உடல் முழு­வதும் பாதிக்கும் அபாயம் உள்­ளது. கீழா நெல்லி, குப்பை மேனியை பயன்­ப­டுத்தி படர்­தா­ம­ரையை போக்கும் மருந்து தயா­ரிக்­கலாம். ஒரு பாத்­தி­ரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்­கவும். சிறு­தீயில் வைத்து தைலப்­ப­தத்தில் காய்ச்­சவும். ஆற­வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்­தா­மரை சரி­யாகும்.

தோலை பற்றி தொல்லை தரும் படர்­தா­ம­ரைக்கு குப்பை மேனி மருந்­தா­கி­றது. இது பூஞ்சை காளான்­களை போக்கக் கூடி­யது. நுண்­கி­ரு­மி­களை அழிக்கக் கூடி­யது. கீழா­நெல்லி மஞ்சள் காமா­லைக்கு மருந்­தா­கி­றது. தோல் நோய்­களை போக்கும் தன்மை கொண்­டது. பூண்­டுவை பயன்­ப­டுத்தி படர்­தா­ம­ரைக்­கான மருந்து தயா­ரிக்­கலாம். ஒரு பாத்­தி­ரத்தில் நல்­லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்­களை சேர்க்­கவும். இதை தைலப்­ப­தத்தில் காய்ச்சி எடுக்­கவும். வடிக்­கட்டி படர்­தா­மரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்­தா­மரை சரி­யாகும். பல்­வேறு நன்­மை­களை கொண்ட பூண்டு பூஞ்சை காளான்­களை போக்கும். தும்பை இலை­களை பயன்­ப­டுத்தி மருந்து தயா­ரிக்­கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பசை எடுக்­கவும்.

இத­னுடன் ஒரு ஸ்பூன் திரி­பலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்­தா­மரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்­து­வர படர்­தா­மரை வில­கிப்­போகும். தும்பை அற்­பு­த­மான மூலிகை. இது சளியை போக்க கூடி­யது. கண்­களில் ஏற்­படும் சிவப்­பு­தன்­மையை போக்கி குளிர்ச்சி தரும் மருந்து குறித்து பார்க்­கலாம். இப்­பி­ரச்­னைக்கு மணத்­தக்­காளி மருந்­தா­கி­றது. மணத்­தக்­காளி சிறிய பூக்கள், மிள­கு­ போன்ற காய்­களை உடை­யது. ஈர­லுக்கு பலம் கொடுக்கும் உண­வாக விளங்­கு­கி­றது. உடலில் ஏற்­படும் அதிக உஷ்ணம், கண்­க­ளுக்கு அதிக வேலை தரு­வது, கணினி முன்பு உட்­கார்ந்து வேலை செய்­வது போன்­ற­வற்றால் கண்களில் ­சிவப்பு தன்மை ஏற்­படும். வாரம் இருமுறை மணத்தக்காளியுடன் வெங்காயம், பாசி பயறு சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் கண் எரிச்சல் போகும். உடல் குளிர்ச்சி பெறும். இரத்தம் சுத்தி கரிக்கப்படும். ஈரல் பலப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04