போதையில் இளம் பெண்களுடன் சேஷ்டை ; இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

03 Oct, 2016 | 07:21 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்தே தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த வாரம் விடுமுறையையில் சென்ற குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் கதிர்காமத்திற்கு சென்றிருந்தனர். அங்கு பொலிஸாருக்கென அமைக்கப்பட்ட ஒய்வுவிடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது இவர்கள் மது போத்தல்களுடன், இளம் பெண்களுடன் தவறான முறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே குறித்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீது பொலிஸ் தலமையகம் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து குறித்த இருவருக்கும் தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி உபபொலிஸ் பரிசோதகர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ் பொலிஸ் தலமை பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பிற்கும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள்  தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02