மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்கும் உதயநிதி

Published By: Digital Desk 4

04 Jan, 2022 | 11:45 AM
image

நடிகரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்த ஜோடியுடன் முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்திற்கு முதன் முறையாக 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் இறுதிகட்ட பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்தப்பணி நிறைவடைந்ததும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37