இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 3

04 Jan, 2022 | 11:15 AM
image

(ஆர்.யசி)

டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியை முன்னெடுக்க முடியாதுள்ளது. இது ஒளடத இறக்குமதியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது உண்மையே. 

ஆனால் இப்போது வரையில் உள்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சுகாதார அமைச்சரிடம் அது குறித்து வினவிய போதே இவ்வாறு கூறினார். அதேபோல் நாட்டின் கொவிட் நிலைமைகள் குறித்தும் கருத்துகளை முன்வைத்திருந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

டெல்டா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவ ஆரம்பித்த வேளையிலும் பல சவால்களுக்கு முகங்கொடுத்தோம். வைரஸ் எவ்வாறு நாட்டிற்குள் வந்தது என்ற பிரச்சினையும் இருந்தது. 

எனினும் டெல்டா வைரஸ் பரவலை நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்.  அதற்காக நாம் பல உயிர்களை இழக்க நேர்ந்தது. 

ஆனாலும் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் விரைவாக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. 

பல நாடுகளில் இன்னமும் இரண்டு தடுப்பூசிகளை கூட வழங்க முடியாதுள்ள நிலையில் எம்மால் பூஸ்டர் தடுப்பூசியையும் வழங்க முடிந்துள்ளது. 

எனவே நாம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். ஆனால் மக்களே வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால்  மட்டுமே எம்மால் வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியும்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமைகளில், டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருந்து இறக்குமதியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆனால் நாட்டிற்குள் இன்னமும் எந்தவொரு மருந்து தட்டுப்பாடும் ஏற்படவில்லை. 

இனியும் அவ்வாறான நிலையொன்று ஏற்படாத விதத்தில் அரசாங்கம் செயற்படும். குறிப்பாக மருந்து இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

நிதி ஒதுக்கீட்டிலும் மருந்து இறக்குமதிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தடையில்லாது எமக்கு கிடைக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நெருக்கடி நிலைமைகள் ஏற்படும். 

குறிப்பாக டொலர்களில் செலுத்த வேண்டிய பணத்திற்கு என்ன செய்வது என்பது குறித்து மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் தற்போது வரையில் மருந்து தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38