Water Garden Sigiriya ஹோட்டல் உத்தியோகபூர்வமாக திறப்பு

Published By: Priyatharshan

03 Oct, 2016 | 04:35 PM
image

மிகப்பெரிய மலைக்குன்றை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய சொகுசு புட்டிக் ஓய்வு விடுதியான வோட்டர் கார்டன் சிகிரியா (Water Garden Sigiriya)அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

வசீகரிக்கும் இராஜதானிய சூழலினால் கவரப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள வோட்டர் கார்டன் ஹோட்டலானது வரலாற்று சிறப்பு மிக்க மலைக்குன்று மற்றும் நிஜமான உள்நாட்டு அனுபவங்களை பெறுவதற்கான மிகப்பொருத்தமான இடமாக அமைந்துள்ளது.

“இதுவொரு சுவாரஷ்யமான பயணமாக இருந்ததுடன், ஒவ்வொரு தருணத்தையும் நாம் ரசித்தோம். எமது குழுவைச் சேர்ந்த அனைவரதும் பல வருட கடின உழைப்பின் பின்னர் எமது கருப்பொருளானது நாம் நினைத்ததைக் காட்டிலும் மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கியுள்ளதை காண்கையில் மகிழ்ச்சியளிப்பதுடன் உங்களுக்கும் பிடிக்கும் என நாம் எண்ணுகிறோம்” என ஹோட்டல் திறப்பு நிகழ்வில் Union Resorts & Spas Ltd இன் தலைவர் அஜித் விஜயசேகர தெரிவித்தார்.

35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வு விடுதியிலிருந்து கோட்டையை பார்க்கக்கூடியதாக உள்ளது. 

6 செழுமையான வோட்டர் villa கள் உள்ளடங்கலாக 30 அதிசொகுசு villas, பார், உணவகம், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா போன்ற அனைத்து விதமான அலங்காரங்களும் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சன்ன தஸ்வத்தவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

“சிகிரியாவின் பூந்தோட்டத்தைப் போன்ற ஒரு பூந்தோட்டத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இருப்பினும், இது முழுமையாக சிகிரியா பூந்தோட்டத்தை ஒத்ததல்ல. ஆனால் அதன் வழியே நடந்து செல்கையில் 5ஆம் நூற்றாண்டில் வாழ்வதைப் போன்ற உணர்வை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்” என தஸ்வத்த தெரிவித்தார்.

“எமது திறப்பு விழாவானது பாரம்பரிய ஹோட்டல் திறப்பைப் போன்றதல்ல, வாடிக்கையாளருக்கு பல அனுபவங்களை வழங்கக்கூடிய எமது தீவு வாழ்க்கையின் தனிப்பட்ட கொண்டாட்டமாக திகழ்கிறது. 

இந்த ஹோட்டலானது பிராந்தியத்தின் சிறந்த அமைவிடமாக அமையும் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என விஜயசேகர தெரிவித்தார்.

“இந்த இடத்தின் அற்புதத்தை வாடிக்கையாளர்களுக்கு உணரச் செய்யவுள்ளதுடன், உலகின் எல்லா மூளைகளிலும் வோட்டர் கார்டனின் சிறப்பம்சங்களை மரபாக உருவாக்குவதே எமது எண்ணமாகும். உலக வரைபடத்தில் வோட்டர் கார்டன் ஹோட்டலானது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்குமெனவும், எமது நாட்டிற்கான புதிய ஆரம்பமாக இதுவமையும் எனவும் நாம் நம்புகிறோம்” என மேலும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57