இந்திய ஒருநாள் அணித் தலைவரானார் கே.எல். ராகுல்

Published By: Digital Desk 4

02 Jan, 2022 | 10:02 PM
image

இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கே. எல். ராகுல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட்: அதிவேக அரைசதம் அடித்தார் கே.எல்.ராகுல் | Dinamalar  Tamil News

இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவி கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.

மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதி உடையவராக கே. எல். ராகுலை நாங்கள் பார்க்கின்றோம். அவருக்கு தலைமைப் பதவியில் மிகுந்த அனுபவும் இருக்கின்றது. தலைமைத்துவத்தில் அவர் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

அப்படித்தான் தெரிவாளர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ரோஹித்துக்கு உடற்தகுதி போதாத இவ்வேளையில் தலைவர் பதவிக்கு ராகுல்தான் மிகப் பொருத்தமானவர் என நாங்கள் கருதினோம். அவர் மீது எமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால் அவரை ஊக்குவிக்கின்றோம் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அணித் தலைவராக ரோஹித் ஷர்மாவுக்கு முதலாவது தொடராக அமையவிருந்தது. ஆனால், உபாதையிலிருந்து அவர் பூரண குணமடையாததால் அவரது தலைமைப் பதவியை பொறுப்பேற்பது சற்று தாமதமடைந்துள்ளது.

இருபது 20 உலகக் கிண்ணம் மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகள் இந்த வருடமும் அடுத்த வருடமும் நடைபெறவுள்ள நிலையில் ரோஹித்தின் உடல்நிலை குறித்து தெரிவாளர்கள் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றனர்.

எனவேதான் அவர் உடற்குதி பெறுவதற்கு ஏதுவாக அவருக்கு போதிய அவகாசம் வழங்கியுள்ளதாக சேத்தன் ஷர்மா மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 2017க்குப் பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம்

கே.எல். ராகுல் (தலைவர்), ஷிக்கர் தவான், ருத்துராஜ் கய்க்வோட், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷாப் பன்ட், இஷான் கிஷான், யுஸ்வேந்த்ர சஹால், ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா (உதவித் தலைவர்), புவ்ணேஷ்வர் குமார், தீப்பக் சஹார், ப்ரசித் கரிஷ்ணா, ஷர்துல் தக்கூர், மொஹம்மத் சிராஜ். 

- (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58