முக்கிய நிறுவனங்களில்  திறமையானவர்கள் இல்லை : லிட்ரோ நிறுவன தலைவரை உடன் நீக்குங்கள் – நிமல் லன்சா

Published By: Digital Desk 4

02 Jan, 2022 | 04:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிவாயு சிலிண்டர் பிரச்சினையால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில் லிட்ரோ நிறுவன தலைவர் ஊடகங்களில் சிரித்துக் கொண்டு உரையாற்றுகிறார்.

அவரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். முக்கிய நிறுவனங்களுக்கு திறமையானவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது உண்மை என கிராமிய வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.

தனது தேவைக்காகவே ரணில் 19 ஐ உருவாக்கினார்: நிமல் லன்சா | Virakesari.lk

நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத தலைவர்கள்,பொது மக்களின் கோரிக்கைகக்கு அமைய முத்துராஜவெல புதிய வர்த்தமானி பத்திரத்தை இரத்து செய்யும் தீர்மானம் இழுத்தடிக்கப்பட்டால் அரச சுகபோகங்களை துறந்து மக்களுடன் ஒன்றினைந்து நிச்சயம் போராடுவேன்.

முத்துராஜவெல பகுதியில் உள்ள 1447 ஹேக்கர் நிலப்பரப்பினை மீளப்பெறும் புதிய வர்த்தமானியை இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை சுற்றாடற்துறை அமைச்சர்,வனஜீவராசிகள் அமைச்சர்,நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய தரப்பினரை ஒன்றினைத்த பாராளுமன்ற குழு எடுத்தது.

;கம்பஹா மாவட்ட தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரனாந்து புள்ளே ஆகியோர் புதிய வர்த்தமானி இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.  இருப்பினும் இதுவரையில் அந்த வர்த்தமானி நீக்கப்படவில்லை.

பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக செயற்பட வேண்டும்.மக்களின் கோரிக்கைக்கு அமைய புதிய வர்த்தமானி நீக்கப்படாவிடின் மக்களுடன் ஒன்றினைந்து போராடுவேன்.

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணுமாறு ஜனாதிபதி, பிரதமர் உரிய தரப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.நீண்ட வரிசையில் இருந்து பெற்றுக் கொள்ளும் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் வெடிக்கின்றன.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஊடகங்களில் சிரித்துக் கொண்டு கதைபேசி திரிகிறார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தனக்கான பொறுப்பினை முறையாக செயற்படுத்த வேண்டும். முடியாவிடின் பதவி விலக வேண்டும்.மக்கள் வீதிகளில் புத்தாண்டின் போதும் கூட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவரை பதவி விலக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவத்திற்கு கடந்த டிசெம்பர் மாதம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.வாக்குறுதியை நிறைவேற்றுவதை விடுத்து ஊடகங்களில் தேவையற்ற விடயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அறியாதவர்கள் நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படும் போது அவர்களுக்கு மக்கள் தொடர்பில் அக்கறை கிடையாது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவரும் அவ்வாறானவரே. முக்கிய நிறுவனங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நடைமுறையில் உண்மையாகியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08